focus in
# 904078
USD 5.00 (No Stock)

மகிழ்ச்சி – ஒரு குட்டிக் கதை

Author :  தலாய் லாமா

Product Details

Country
India
Publisher
தன்னறம் நூல்வெளி
Format PaperBack
Language Tamil
Year of Publication 2025
Categories Children Books
Shipping Charges(USD)

Product Description

என் அன்பு செல்லங்களா, இந்த உலகம் முழுவதும் பயணித்து, அற்புதமான குழந்தைகள் பலரை, நாங்கள் சந்தித்து இருக்கிறோம். ஆனாலும், எங்களால் எல்லோரையும் நேரில் சந்திக்க இயலவில்லை. அதனால் உங்களிடம் ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, இந்தக் கதையை பகிர்ந்துக்கொள்ள விரும்பினோம். நீங்கள் வருத்தமாக இருந்தால், மகிழ்ச்சி என்பது மிகத் தொலைவில் இல்லை என்று எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தப் புத்தகத்தை எழுதினோம். சில நேரங்களில் நாம் சோகமாக இருப்போம். சில நேரங்களில் நமக்கு கோபம் வரும். சில நேரங்களில் நாம் பயப்படுவோம். ஆனால் செல்லங்களா, மழைக்கும் புயலுக்கும் பிறகு நமக்காக ஒரு வானவில் முளைக்குமென நாங்கள் நம்புகிறோம். இக்குட்டிப் புத்தகத்தின் பக்கங்களில், நீங்கள் மகிழ்ச்சியையும் வானவில்லையும் ஒரு சேர காணமுடியுமென நம்புகிறோம். அந்த மகிழ்ச்சியை நீங்களும் உங்களுக்கு விருப்பமானவர்களும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் கண்டுக்கொண்ட மகிழ்ச்சியின் இரகசியம் இதுவே அன்பு செல்லங்களா, நாம் பிறரோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள. பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சி அளவின்றி பெருகும். அன்புடன், உங்கள் நண்பர்கள். தலாய் லாமா டெஸ்மாண்ட் டூட்டூ

Product added to Cart
Copied